Sunday, April 7, 2019

இராமேஸ்வரம் புனித யாத்திரை 2019


இராமேஸ்வரம் புனித யாத்திரை 2019- மார்ச்.


தென்னாடுடைய சிவனே போற்றி….
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி….


எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என் அப்பன் ஈசன் அருளால் இராமேஸ்வரம் புனித யாத்திரை நிறைவாக அமைந்தது. நமது ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் சார்பில் காசி யாத்திரை செல்பவர்களுக்காக இராமேஸ்வரத்தில் சிவ பூஜை நடைபெற்றது. இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் அருள்மிகு பர்வதவர்த்தினி உடனுறை இராமநாதசுவாமியை தரிசனம் செய்தோம்.
மேலும் இராமேஸ்வரம் தனுஷ்கோடி ஹரி சிவன் அடியார் திருமடம்   ஸ்ரீ ஸ்ரீ சிவஸ்ரீ அகோரசிவம் சிவயோகீ கணேச பண்டார சுவாமிகள் அவர்கள் அரிச்சல் முனையில் காசி செல்பவர்களுக்காக சிறப்பு சிவபூஜயும், சிலருக்கு பித்ரு தோஷ பரிகார பூஜையும் செய்து கொடுத்தார். நம்முடன் வந்திருந்த பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாட அனைவரும் பக்தியில் திளைத்தோம். இராமநாதசுவாமி கோவிலுக்கு மிக அருகில் நல்ல தரமான உணவுடன் கூடிய தங்கும் விடுதி முன்பதிவு செய்திருந்ததால் அனைவரும் நன்றாக ஓய்வு எடுத்தனர்.
இந்த யாத்திரையின் போது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன், திருப்பட்டூர் பிரம்மா, அருள்மிகு பிரம்ம நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர், பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி, பிரம்மன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 லிங்கங்கள்(இவற்றை வழிபட்டாலே 12 ஜோதிர்லிங்கங்களை வழிபட்ட பலன் உண்டு), காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி கோவில் மற்றும் அங்கு அமைந்துள்ள வியாக்ரபாதர் ஜீவசமாதி, 3500 ஆண்டுகள் பழமையான பூர்ண புஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், தேவிபட்டிணம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷான நவக்கிரகங்கள், ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி (ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாள்) ஆதிஜெகன்னாத பெருமாள், வாழ்வில் ஒருமுறையாவது சென்று வணங்க வேண்டிய உத்திரகோசமங்கை (சிவன் பிறந்த ஊர்) மங்களேசுவரி சமேத மங்களேசுவரர், மரகத நடராஜர்,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி ஹரி சிவன் அடியார் திருமடம் உள்ளிட்ட பல ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தோம். இந்த யாத்திரை சிறப்பாக அமைய உதவிய இறையருளை வணங்கி ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். நன்றி. ஒம் நமசிவாய…
























































No comments:

Post a Comment