Saturday, July 13, 2019

தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் புனித யாத்திரை

தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் புனித யாத்திரை

கொங்கு மண்டலம் - பாடல் பெற்ற சிவாலயங்கள்

1.        திருநணா(பவானி) - சங்கமேஸ்வரர்

2.        திருச்செங்கோடு – அர்த்தநாரீஸ்வரர்

3.        கருவூர்(கரூர்) – பசுபதிநாதர்

4.        திருமுருகப்பூண்டி – திருமுருகநாத சுவாமி

5.        கொடுமுடி – கொடுமுடிநாதர்

6.        திருப்புக்கொளியூர்(அவிநாசி) – அவிநாசியப்பர்

7.        வெஞ்சமாக்கூடலூர் – விகிர்தநாதேஸ்வரர்

 

3 நாட்கள் பயணம்.

புறப்படும் தேதி: 14 - 08 -2019

வாகன வசதி, தங்கும் அறை வசதி, சைவ உணவுடன் ஒரு நபருக்கு கட்டணம் ரூ.3300 மட்டும்.

20 நபர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவதால் முன்பதிவு அவசியம்.

முன்பதிவின்படி வாகனத்தில் இருக்கை ஒதுக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு :

ஜோதிட செம்மல்.  ஸ்ரீமதி. சுசிலா.

ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்.

வாட்ஸ் அப்: 9677211371, 8190932481.

தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…

ஓம் நமசிவாய.


Sunday, April 7, 2019

இராமேஸ்வரம் புனித யாத்திரை 2019


இராமேஸ்வரம் புனித யாத்திரை 2019- மார்ச்.


தென்னாடுடைய சிவனே போற்றி….
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி….


எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் என் அப்பன் ஈசன் அருளால் இராமேஸ்வரம் புனித யாத்திரை நிறைவாக அமைந்தது. நமது ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் சார்பில் காசி யாத்திரை செல்பவர்களுக்காக இராமேஸ்வரத்தில் சிவ பூஜை நடைபெற்றது. இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் அருள்மிகு பர்வதவர்த்தினி உடனுறை இராமநாதசுவாமியை தரிசனம் செய்தோம்.
மேலும் இராமேஸ்வரம் தனுஷ்கோடி ஹரி சிவன் அடியார் திருமடம்   ஸ்ரீ ஸ்ரீ சிவஸ்ரீ அகோரசிவம் சிவயோகீ கணேச பண்டார சுவாமிகள் அவர்கள் அரிச்சல் முனையில் காசி செல்பவர்களுக்காக சிறப்பு சிவபூஜயும், சிலருக்கு பித்ரு தோஷ பரிகார பூஜையும் செய்து கொடுத்தார். நம்முடன் வந்திருந்த பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாட அனைவரும் பக்தியில் திளைத்தோம். இராமநாதசுவாமி கோவிலுக்கு மிக அருகில் நல்ல தரமான உணவுடன் கூடிய தங்கும் விடுதி முன்பதிவு செய்திருந்ததால் அனைவரும் நன்றாக ஓய்வு எடுத்தனர்.
இந்த யாத்திரையின் போது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன், திருப்பட்டூர் பிரம்மா, அருள்மிகு பிரம்ம நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர், பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி, பிரம்மன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 லிங்கங்கள்(இவற்றை வழிபட்டாலே 12 ஜோதிர்லிங்கங்களை வழிபட்ட பலன் உண்டு), காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி கோவில் மற்றும் அங்கு அமைந்துள்ள வியாக்ரபாதர் ஜீவசமாதி, 3500 ஆண்டுகள் பழமையான பூர்ண புஷ்கலாம்பிகா சமேத அரங்கேற்ற அய்யனார் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், தேவிபட்டிணம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷான நவக்கிரகங்கள், ராமாயண காலத்துக்கு முற்பட்ட தலமான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணி (ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாள்) ஆதிஜெகன்னாத பெருமாள், வாழ்வில் ஒருமுறையாவது சென்று வணங்க வேண்டிய உத்திரகோசமங்கை (சிவன் பிறந்த ஊர்) மங்களேசுவரி சமேத மங்களேசுவரர், மரகத நடராஜர்,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி ஹரி சிவன் அடியார் திருமடம் உள்ளிட்ட பல ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்தோம். இந்த யாத்திரை சிறப்பாக அமைய உதவிய இறையருளை வணங்கி ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். நன்றி. ஒம் நமசிவாய…
























































Tuesday, March 12, 2019

திருக்கயிலாய - மானசரோவர் புனித யாத்திரை - 2019



தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவநேய செல்வர்களுக்கும்அடியார் பெருமக்களுக்கும் 
அடியேன் ஸ்ரீமதிசுசிலாவின் சிவ வணக்கங்கள்.!

அவனருளாலே அவன் தாள் வணங்கி. . .!

      நாங்கள் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆன்மிக புனித யாத்திரைகளுக்கு அழைத்துச் சென்று வருகிறோம். இறையருளால் பல்வேறு ஆலயங்கள், அதிஷ்டானங்கள், ஜீவசமாதிகள், புன்னிய நதிகள், சித்தர்கள், மகான்கள் தரிசனம் என தரிசித்து வந்துள்ளோம்அதன் தொடர்ச்சியாக இறையருளால் இந்த ஆண்டு(2019) ஜூன் மாதம் புனித திருக்கயிலாயம்- மானசரோவர் யாத்திரை சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவான திருக்கயிலாயம்மானசரோவர் யாத்திரை என்பது சிவன் அழைப்பு இருந்தால் மட்டுமே சென்று வர இயலும் என்பது உண்மை. அந்த வாய்ப்பினை நல்கிய எம்பெருமான், ஐயன் பாதம் பணிந்து இந்த ஆண்டு செல்ல உள்ளோம். தகுந்த முன்னேற்பாடுகள், தேவையான வசதிகள் மற்றும் அனுபவமிக்க வழிகாட்டிகளுடன் சென்றுவர திட்டமிட்டுள்ளோம்.

நிற்க, ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு திருக்கயிலாய புனித யாத்திரை செல்பவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையாக மொத்த கட்டணத்தில் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் அடியார் பெருமக்கள் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2019 மார்ச் மாத இறுதிக்குள் முன்பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை ரூ.5 ஆயிரம் குறைவு. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி திருக்கயிலாயமானசரோவர் புனித யாத்திரையில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு: ஜோதிட செம்மல். ஸ்ரீமதி. சுசிலா மாரீஸ்வரன்,
ஸ்ரீ யோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ்,
சென்னை - 56.
Call and WhatsApp me
9677211371, 8190932481.